பூகோள வெப்பமடைதலும் கடல் மட்ட மாற்றங்களும்

பூகோள வெப்பமடைதலும் கடல் மட்ட மாற்றங்களும் 

காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக புவியின் வெப்பநிலையில் ஏற்படும் சராசரி அதிகரிப்பினையே பூகோள வெப்பமடைதல்(Global warming) என கூறிக்கொள்ளுவார்கள். இவ்வாறன பூகோள வெப்பமயமாதலை தூண்டும் காரணிகள் 2 வகைப்படும். அவையாவன 
1)இயற்கை காரணிகள்-சூரிய கதிர் வீசலின் தாக்கம், பூகோள பாதையில் உள்ள மாற்றம், எரிமலை வெடிப்புகள், கடற்பரப்பு வேறுபாடுகள், பச்சை வீட்டுவாயுக்கள்
2)மானிட காரணிகள்-உயிர் சுவட்டு எரிபொருள் பாவனை, காடழிப்பு, மந்தை மேய்த்தல், நெல் உற்பத்தி, திண்மக்கழிவுகற்றல், கைத்தொழில் நடவடிக்கைகள் 
காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் ஏற்கனவே ஆரம்ப காலத்திலிருந்தே தென்பட்டு வருகின்றது. பூகோள வெப்பமடைதலின் காரணமாக முனைவு பனிப்படலங்கள் உருகுகின்றன. கடல் மட்ட உயர்வு, பணியாறுகளின் நகர்வுகள், அயன புயல்கள் செறிவு, தவர்போர்வைகளின் பரம்பலின் மாற்றங்கள் போன்றன ஏற்படுகின்றன. கடந்த 100 வருடங்களில் பூகோள கடல் மட்டம் வருடாந்தம் 1-2  மீட்டர்களாக அதிகரித்துள்ளது. 1992இல் இருந்து அதிகரிப்பு வீதம் வருடத்துக்கு 3மில்லிமீட்டர் ஆக இருந்துள்ளது. இதற்கான காரணிகளாக  சமுத்திரங்களில் ஏற்படும் வெப்ப விரிவாக்கம் காரணமாக கடல் மட்டம் உயர்வடைதல், பனிப்படலங்கள் உருகின்றதால் கடல் மட்டம் உயர்வடைவுகின்றது.இதற்கு கிறீன்லாந்து,அந்தாட்டிக்கா சிறந்த சான்றாக காணப்படுகின்றது.
அயன புயல்கள் தோன்றுவதற்கு பிரதான காரணமாக இருப்பது கடற்பரப்புகளில் ஏற்படும் வெப்பநிலை ஆகும். புயல்கள் மையத்திலிருந்து 60 மைல்களுக்கு ஹரிக்கேன் புயல்கள் செறிவு 8-16% ஆகவும், மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு 26% எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடல் மட்ட உயர்வின் காரணமாக கரையோர பகுதிகள் 400 அடி உட்பகுதிகளை நோக்கி நகரும். புயல்களினால் நாடுகளில் காணப்படும் தாழ் நிலங்கள் பாதிப்படையும். குறிப்பாக ஐரோப்பாவின் மத்திய தரை பகுதியில் சமீபகாலமாக பெரும் வரட்சி ,காட்டுத்தீ என்பன ஏற்பட்டு வருவதோடு ஏறக்குறைய 16.5 மில்லியன் ஐரோப்பிய மக்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளனர். அத்துடன் நிலசீரழிவுகள் 3லட்ஷம் பரப்பில் நடைபெற்று வருகின்றது. 
இது தவிர பூகோள வெப்பம் காரணமாக கரையோர சூழலின் அதிகளவு சரிவு கொண்டதாக காணப்படும் முருகைகள் அதிகளவில் பாதிக்கப்படு வருகின்றது. கரையோர பகுதிகளில் காணப்படும் மீனினங்கள் அயன வலய பகுதிகளுக்குள் அடங்குகின்றது. இப்பாறைகள் மக்களின் பாதுகாப்பு, தொழில்நடவடிக்கை ஆகியனவற்றிற்கு துணையாக அமைகின்றது இருந்தபோதிலும் வெப்பநிலை 30 செல்ஸியஸ் வரை அதிகரிக்குமானால் முருகைக்கற்கள் லிவடையும் நிலை உருவாகும். இருப்பினும் இன்று 3 செல்ஸியஸ் வரை அதிகரித்து வருவதாக IPCC(Inter Pannael Challenge Of Climate Change) கூறுகின்றது.

சமுத்திரத்தினால் சூழப்பட்டுள்ள அந்தடிக்கா கண்டத்தின் 99%ஆன பகுதி பனிப்படலத்தினால் மூடப்பட்டுள்ளது. அந்தாட்டிக்கா பனிப்படலத்தின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 2000மீட்டர்கள் ஆகும். சில இடங்களில் இதன் ஆழம் 4700மீட்டர்கள் ஆகும். அந்தடிக்கா கண்டத்தில் 3 பாரிய பனிப்படலங்கள் 11 வருடங்களாக உருகி வருகிறது. இதனால் சீல் மீன்கள், பறவைகள் பென்குயின்கள் போன்றன பாதிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் ஆடிக்கடல் பனிப்போர்வை உருக்கும்நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்டிக் சமுத்திரங்களில் 10-15%ஆன பகுதி கோடை களங்களில் மூடப்பட்டிருக்கும். ஆனாலும் 20%வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 1980களிலிருந்து 30% இழக்கப்படுவிட்ட்து. பனிப்போர்வை இலக்கப்படுவதனால் முனைவு கரடிகள் அளிக்கின்றதுடன் மக்களின் வேடடையாடுதல் தொழிலும் பாதிக்கப்படுகின்றது.
பூகோள வெப்பத்தினால் நீர்மின்சக்தி பாதிக்கப்படுகின்றது. இதனால் அயனப்பிரதேசம் வரடசிக்கு உட்படும். உயர் வெப்பநிலை காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் கலிபோர்னியாவில் விவசாய கைத்தொழிலில் 30 பில்லியன் டொலர் இழப்பு நடைபெறும் என கூறப்படுகின்றது.

கடல் மட்ட உயர்வினால் ஏற்படும் தாக்கங்கள் 
1)இயற்கையாக அமைவு பெற்றுள்ள சூழல் தொகுதிகள், பவள பாறைகள் போறவற்றினை உள்ளடக்கிய 1196 தீவுகளை கொண்ட மாலைதீவில் கடல் மட்டம் ஒரு மீட்டராக அதிகரிக்குமானால் சனத்தொகை முழுவதும் அழிந்து விடும் நிலை உருவாகும்.

2)இதே பிரச்சனையை பசுபிக் சமுத்திர தீவுகளான ரேகேலா, மார்சல் தீவு, துவாலு, லின் தீவு, கிருபாடடி போன்றன இதில் கொள்ளும்.

3)கடல் மட்ட அதிகரிப்பினால் தாழ்நில பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவர். கரையோர பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்படும். உவர் நீரின் தன்மை அதிகரிக்கும். இதன்  காரணமாக விவசாய நிலங்கள் பாதிப்படையும். ஐக்கிய ஐக்கிய அமெரிக்காவில் 5-6 மீட்டர் உயர்வடையுமானால் புளோரிடாவின் அரைவாசி பகுதி கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என IPCC(Inter Pannael Challenge Of Climate Change) கூறுகின்றது.

4)கடல் மட்ட மாற்றமானது பகமாஸ்,சூரினாம், கயானா, அலாஸ்கா, தென் புளோரிடா, லூசியானா, பொஸ்டான், நியூயோர்க், கேப்கோட், சான்பிரான்சிஸ்க்கோ, உள்ளிட்ட ஐக்கிய அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் உயர்ச்சியானது அதிகளவில் எதிர்காலங்களில் காணப்படும்.

5)கரீபியன் பசுபிக் தீவுகள் அதிகமான புயல் துடிப்புகள் வெள்ளப்பெருக்குகளினை சந்திக்க நேரிடும். கடல் மட்ட உயர்வானது ஒரு மீட்டர் எழுச்சியடைந்தால் 8மில்லியன் மக்கள் இடம் பெயர நேரிடும். 
6) வானிலை மாற்றத்தினால் ஹரிக்கேன் புயல் செறிவினால் கரீபியன் தீவுகள், வெனிசுலா, மத்திய அமெரிக்கா, ஐக்கிய அமெரிக்கா போன்றன முக்கியமாக பாதிக்கப்படும். 
7)நெதர்லாந்தில் கடல் மட்டம் 70-200 சென்றிமீட்டர் உயர்வடைந்தால் 3.1-8.8 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பங்களாதேஷ் நிலப்பரப்பில் 12%உம் 10 மில்லியன் மக்களும் பாதிக்கப்படுவர்.
8) ஐக்கிய அமெரிக்காவின் கரையோரங்களில் நீர் மட்டம் 6 அடிக்கு உயர்வடையலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. 2100களில் காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய புயல் துடிப்புகள் , அலைகளின் பெருக்கு போன்றவற்றால் கரையோர பகுதிகள் நீரினுள் மூழ்கலாம் எனவும் குறிப்பாக 1அடி உயர்ந்தால் 3 லட்ஷம் மக்களும், 2 அடி  உயர்ந்தால் 7 லட்ஷம் மக்களும் 3 அடி 10 லட்ஷம் மக்களும் பாதிக்கப்படுவார்கள் என IPCC(Inter Pannael Challenge Of Climate Change) கூறுகின்றது.


Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.